கடந்த 1953-ஆம் ஆண்டில், கல்லக்குடி எனும் டால்மியாபுரம் ரயில் நிலையத்திற்கு மீண்டும் பெயர் சூட்ட வேண்டும் என்று, தண்டவாளத்தில் தலைவைத்து போராடினார். இதுதான் கலைஞருக்கும், திமுகவிற்கு மிகப்பெரிய புகழைத்தேடித்தந்தது, அரசியலில் கலைஞர் யார் என்றும் தெரியச்செய்தது.
தமிழகத்தை 5 முறை முதல்வராக ஆட்சி செய்த பெருமை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கே உண்டு, இவர் களமிறங்கிய அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று, கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணிபுரிந்த பெருமை கலைஞருக்கு மட்டுமே உள்ளது. திமுக-வில் சுமார் 50 ஆண்டுகள் தலைவராகவும், தமிழக அரசியலில் 80 ஆண்டுகள் கோலோச்சிய பெருமை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரையே சாரும். இவரின் அரசியல் பயணம் என்பது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. தமிழக மக்களால் "கலைஞர்" என அன்போடு அழைக்கப்படுபவர், மக்களைப் பார்த்து "என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே" என அன்போடு அழைப்பார்.
© 2023 அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.