தன்னுடைய ஆரம்பக்கல்வியை திருக்குவளையில் பயின்ற கலைஞர் அவர்கள், திருவாரூரிலுள்ள மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார். குறிப்பாக கலைஞர் அவர்கள் தன்னுடைய சிறுவயது முதலே நாடகம், கவிதை, இலக்கியம் உள்ளிட்ட கலைகளின் மீது தீராத தாகம் கொண்டிருந்தார். கடந்த 1939-ல் 8-ஆம் வகுப்பு படிக்கும் போது பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட கலைஞர் அவர்கள் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு "நட்பு" ஆகும். மேலும் ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளின் மீதும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.
© 2023 அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.