கல்வியே செல்வம்

  • மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கினார்
  • மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார்
  • தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கினார்
  • மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் இரண்டு முட்டை தந்து சிறப்பு ஆணையை வெளியிட்டார்
  • பொறியாளர் பட்டப் படிப்பிற்காக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்தார்
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர்களுக்கான கல்வித் தொகையை உயர்த்தி, அவர்களுக்காக அதிக எண்ணிக்கையிலான விடுதிகளை திறந்து வைத்தார்.
  • பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 30%, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18% சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார்
  • பி.யூ.சி. வரை இலவசக் கல்வி உருவாக்கித் தந்தவர் கலைஞர்
  • கோவையில் விவசாயக் கல்லூரியை உருவாக்கியவர் கலைஞர்
  • ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்­குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் உருவாக்கினார்
  • தொழில்முறை கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தவர்
  • இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரியை உருவாக்கினார்
  • பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக்கல்லூரி உள்ளிட்டவற்றை உருவாக்கினார்
  • வீட்டின் முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
  • காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தார்
  • பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தார்
  • சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்