மாணவர் மன்றம்

கடந்த 1944-ஆம் ஆண்டு "திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தை" உருவாக்கி அதற்கு தலைவரானார் கலைஞர். இந்த அமைப்பின் மூலமாக தன்னுடன் பயிலும் சக மாணவர்களை அழைத்துக்கொண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக போராடினார். தன் இளம் வயதில்(16) 'மாணவர் நேசன்' என்ற பத்திரிகையையும் துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தினார். இந்த துவக்கம் தான் பிற்காலத்தில் "முரசொலி" எனும் மாபெரும் பிரம்மாண்டமாக உருவாக வித்திட்டது. இளைஞர்களின் பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலை ஊக்கப்படுத்த "இளைஞர் மறுமலர்ச்சி" அமைப்பை உருவாக்கினார். க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் போன்ற திராவிட இயக்க முன்னோடிகள் கலைஞரின் அணியில் சிறுவயதில் இருந்தே இணைந்து செயல்பட்டனர்.