மகத்தான மருத்துவம்

சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு எனப் பல துறைகளில் வட மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்கான விதைகளை விதைத்தவர் கலைஞர்.

சுகாதாரத்துறையில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு அதிசயமாக சமூகநீதியுடன் கூடிய மருத்துவச் சேவையை கலைஞர் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்

மருத்துவப்படிப்பு, மருத்துவச் சேவை ஆகிய இரண்டிலும், தனது ஆட்சிக் காலத்தில், சமூகநீதியை விட்டுக் கொடுக்காதவர் கலைஞர்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியவர் கலைஞர். அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு உள் ஒதுக்கீட்டையும் உறுதி செய்தவர் நமது கலைஞர்.

சென்னை தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர்

தமிழ்நாடு முழுவதும் தரமான மருத்துவச் சேவையை வழங்கவும், அதற்கேற்றபடி, தரமான மருத்துவர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கவும், மாவட்டம்தோறும் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியை ஏற்படுத்த அயராது பாடுபட்டவர் கலைஞர்.

டாக்டர் முத்துலட்சுமிரெட்டி திட்டத்தின் கீழ், ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகை வழங்க வழிவகை செய்தவர் கலைஞர்

பால்மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, தமிழகத்தை தனித்துவ மாநிலமாக நிற்கச் செய்தவர் கலைஞர்

டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது நமது கலைஞர்

24 மணிநேர மருத்துவ சேவை தந்தது நமது கலைஞர்

104 கோடி ரூபாயில் சென்னையில் பொது மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் அமைத்து தந்தவர் கலைஞர்

கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் நமது கலைஞர்

முதியோருக்கு "இலவச கண்ணொளி திட்டத்தை" அறிமுகப்படுத்தியவர் கலைஞர்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்து தந்தவர் கலைஞர்.