1938-ல் 7ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த கலைஞர், தமிழ்க்கொடியை கையில் பிடித்தவாறு, "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதுவல்லவே!" என்று முழக்கமிட்டு போராடினார். அதற்காக தன்னுடைய இந்தி ஆசிரியரிடமும், அடிவாங்கினார்.
தஞ்சையில் நீதிக்கட்சித்தலைவராக இருந்தவர்தான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி, இவரின் பேச்சாற்றலை மிகவும் விரும்பிய காரணத்தால், தன் மகன்களில் ஒருவருக்கு அழகிரி என பெயர் சூட்டி அழகுபார்த்தார் கலைஞர். இதேபோல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஜோசப் மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னுடைய மற்றொரு மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் கலைஞர்.
விடுதலை தினத்தன்று ஆளுநர் கொடியேற்றும் முறையை, முதல்வர்கள் கொடியேற்றலாம் என்ற புதுமையைத் தந்தவர் கலைஞர் தான்.
சமூகத்தில் இழிவாக பேசப்படும் வேற்று மொழிச்சொற்களை மாற்றி, தமிழ் மொழியில் அழகாக கையாண்ட பெருமை கலைஞர்யே சாரும்.
மூன்றாம் பாலினத்தவரை திருநங்கைகள் என்றும், விதவைப்பெண்களை கைம்பெண்கள் என்றும், உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என்றும் அழைக்கப்படவேண்டும் என்ற சட்டத்தை இயற்றியவர் கலைஞர்.
தொழுநோயாளிகள்-பிச்சைக்காரர்கள் திட்டம், ஆலயங்களில் கருணை இல்லங்கள் உருவாக்குதல், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள், பெண்களுக்கு சொத்துரிமை, தியாகிகளுக்கு ஓய்வூதியம், சமத்துவபுரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை உருவாக்கியவர் கலைஞர்.
© 2023 அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.