தொடர் வண்டிகளில் தமிழ் பெயர் பலகைகள், ஊர்திகளில் பதிவெண் பலகைகளில் தமிழில் எழுத அனுமதி போன்ற புதிய மாற்றங்களை கொண்டு வந்தவர் கலைஞர்
1996-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழில் சென்னை என மாற்ற உத்தரவிட்டவர் கலைஞர்
மூன்றாம் பாலினத்தவரை "திருநங்கைகள், திருநம்பிகள் " என அழைக்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியவர் கலைஞர்
விதவை என்பதை "கைம்பெண்" என மாற்றியவர் கலைஞர்
ஊனமுற்றோரை "மாற்றுத்திறனாளிகள்" என அழைக்க உத்தரவிட்டவர் கலைஞர்
தமிழ் மொழியை செம்மொழியாக்க, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தி புது புரட்சி கண்டவர் கலைஞர்
திருவள்ளுவரை அகிலமே கண்டு வியக்கும் அளவிற்கு குமரியில் 7,000 டன் எடையுடன், 133 அடிஉயரத்தில் ரூ.9 கோடியே 65 லட்சம் செலவில் சிலை அமைத்து சாதனை புரிந்தவர் கலைஞர்.
சிலப்பதிகார நாயகி கண்ணகிக்கு தமிழர் கடற்கரையில் சிலை நிறுவியவர் கலைஞர்.
தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என பெயர் சூட்டியவர் கலைஞர்
தைத்திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தவர் கலைஞர்
மெட்ராஸ் மாகாணத்தை சென்னை என மாற்றியவர் கலைஞர்
மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை அவர்களின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தவர் கலைஞர்
தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளித்ததுடன், 20% இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர்